தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், சமீபத்தில் திமுகவில் இணைந்தவருமான பி.டி. செல்வகுமார், விஜய்யின் அரசியல் நகர்வுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். திமுகவின் வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணலில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “விஜய் செய்யும் எதிலும் ஒரு சரியான திட்டமிடுதல் இல்லை. தமிழக வெற்றிக் கழகம் என்பது ஒரு கட்சியே கிடையாது” என்று அதிரடியாகத் தெரிவித்தார். மேலும், “விஜய் ஒரே நாளில் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற பகல் கனவில் இருக்கிறார்” என்று கூறி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
**தா இதாண்டா edit uh..🤙🔥💥pic.twitter.com/lPA5M8NGuA
— Ꮮᴇɢᴇɴᴅᵀⱽᴷ ·〇 ̶͞ᐟ ✨ (@LegenD_AK_tweet) March 17, 2026
இந்த விமர்சனம் தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பேசிய செல்வகுமார், வரும் சட்டமன்றத் தேர்தலில் தவெக-வை விரட்டி அடிப்போம் என்றும் சவால் விடுத்துள்ளார். ஒரு காலத்தில் விஜய்யின் மிக நெருக்கமான விசுவாசியாக இருந்தவரே, இப்போது எதிர் முகாமில் இருந்து கொண்டு இவ்வளவு காட்டமான விமர்சனங்களை முன்வைப்பது, வரும் தேர்தல் களம் எவ்வளவு சூடாக இருக்கப்போகிறது என்பதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. விஜய்யின் அரசியல் வருகை குறித்து பி.டி. செல்வகுமார் முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
