உலகின் தொழில்நுட்ப ஜாம்பவானான ஜப்பான், பாதுகாப்பு விஷயத்திலும் எப்போதுமே ஒரு படி முன்னால் இருப்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. ஜப்பானில் உள்ள பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒவ்வொரு பால்கனியிலும் ஒரு பிரத்யேக கதவு அல்லது தளம் அமைக்கப்பட்டிருக்கும். அவசர காலங்களில், குறிப்பாக தீ விபத்து அல்லது நிலநடுக்கத்தின் போது மின் தூக்கிகள் (Lifts) செயல்படாத சூழலில், இந்தப் பால்கனித் தளத்தை ஒரு தானியங்கி ஏணியாக மாற்ற முடியும். இதன் மூலம் மக்கள் மிக எளிதாக அடுத்தடுத்த தளங்களுக்கு இறங்கி பாதுகாப்பாக வெளியேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
जापान की हर बिल्डिंग में ऐसी बालकनी जरूर बनी होती है..!!
जिसे इमर्जेंसी के समय एक सीढ़ी के तौरपर इस्तेमाल किया जा सकता है।
ये एक कमाल और उपयोगी इंजीनियरिंग की मिशाल है— जिसे दुनियां के बाकी देशों को भी अपनाना चाहिए। pic.twitter.com/i6wVMjeWNX
— Dr. Sheetal yadav (@Sheetal2242) March 17, 2026
இந்த எளிய அதே சமயம் மிகச்சிறந்த பொறியியல் நுட்பம் தற்போது இணையவாசிகள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. நெருக்கடியான நகரங்களில் தீயணைப்பு வாகனங்கள் உள்ளே நுழைய முடியாத நேரங்களில், இத்தகைய உள் கட்டமைப்பு வசதிகள் பல உயிர்களைக் காப்பாற்றும் என்பதில் சந்தேகமில்லை. ஜப்பானின் இந்த முன்மாதிரியான பாதுகாப்பு முறையை உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டு கட்டட விதிமுறைகளில் சேர்க்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
