தமிழ் சினிமாவின் குடும்பத் திரைப்படங்களை இயக்கியதில் தனித்துவம் பெற்றவரும், நடிகருமான இயக்குநர் வி. சேகர் இன்று (நவம்பர் 14) காலமானார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.
‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘பொறந்த வீடா புகுந்த வீடா’ போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கிய மக்கள் இயக்குநர் வி. சேகர் மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் எனப் பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
