கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படத்திலிருந்து விலகுவதாக சுந்தர் சி வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது.

சுந்தர் சியின் விலகலுக்கான காரணம் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விவாதித்து வந்த நிலையில், இது தொடர்பான ஒரு விவாதத்தில், “ஒருவேளை படத்தில் குஷ்புவுடன் ஆடலாமா? என கேட்டிருப்பார்களோ…” என்று ஒரு ரசிகர் ஏடாகூடமான கேள்வியை எழுப்பினார்.

இதற்கு நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார். அந்தப் பதிவில், “இல்ல… உங்க வீட்டுல இருந்து யாரையாவது ஆட வைக்கலாம்னு நினைச்சோம்” என்று காட்டமாகப் பதிலளித்துள்ளார். குஷ்புவின் இந்தக் கூர்மையான பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.