பாமக கட்சியின் மூத்த தலைவரும் ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க ஸ்டாலினை கொலை செய்ய முயற்சி நடந்ததாக தகவல் வெளிவந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இந்த தாக்குதலில் அவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய போதிலும் அலுவலகத்தின் கண்ணாடி மற்றும் கதவு உள்ளிட்டவைகள் சேதமடைந்துள்ளது.

தற்போது ஸ்டாலின் ராமதாஸ் ஆதரவாளராக இருக்கும் நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பவம் தற்போது பாமகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.