பிரபல நடிகை விஜயசாந்தி, பாஜகவில் இருந்து விலகி, காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானாவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியலில் விஜயசாந்தி பெயர் இடம்பெறவில்லை. இதனால் அவர், தனது தொண்டர்களுடன் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணையவுள்ளார். மேலும், பிஆர்எஸ் குடும்ப ஆட்சியில் இருந்து மக்களை காப்பாற்ற காங்கிரஸில் இருந்து போராட வேண்டும் எனவும் கூறியுள்ளார்