விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அனுமதி இன்றி சாத்தூர் அருகே உள்ள அந்த பட்டாசு சாலையில் கருந்திரி தயாரித்துள்ளனர்.
அப்போது திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்ட நிலையில் 2 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
