அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் திருச்செங்கோடு யூனியன் முன்னாள் சேர்மனுமான பாலசுப்பிரமணியன் தற்போது அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் அருண்ராஜ் முன்னிலையில் இணைந்துள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.

இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள x பதிவில், திருச்செங்கோட்டில் நீண்ட கால அரசியல் அனுபவம் பெற்ற அதிமுக முன்னாள் பிரமுகர் பாலசுப்ரமணியத்தை இன்று அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தேன். மேலும் அவருடைய வருகை கொங்கு மண்டலத்தில் நம்முடைய கரங்களை வலுப்படுத்தும் என்றார்.