தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக்கே முதலமைச்சர் விஜய்தான். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ லீமா ரோஸ், முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து கை குலுக்கினார்.
அப்போது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், ரஜினிகாந்தின் ‘பாட்ஷா’ பட பாணியில் ஒரு கையால் கை குலுக்கிக் கொண்டே, மறு கையால் தனது தோள்பட்டையை தொட்டு மிகுந்த மரியாதையுடன் வணக்கம் தெரிவித்தார்.
முதலமைச்சர் விஜய்யுடன் கை குலுக்கி பாட்ஷா Style-லில் மரியாதை செய்த அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ்..! #Chennai #ChiefMinister #SPVelumani #LeemaRose #TVK #JosephVijay #Vijay #ADMK #CVShanmugam #Newstamil24x7 pic.twitter.com/sLNHPaSwdp
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) May 12, 2026
சட்டமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு அவரது கட்சியினர் காட்டும் அதே விசுவாசமான மரியாதையை, இன்று விஜய்க்கு ஒரு அதிமுக பிரமுகர் காட்டியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த “பாட்ஷா ஸ்டைல்” லீமா ரோஸின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.
