நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு தற்போது உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. அவருக்கு 6 வார காலம் இடைக்கால ஜாமின் வழங்கிய நீதிமன்றம் அவரது சொந்த நிதியிலிருந்து 100 கோடி ரூபாய் உயர்நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் சொத்துக்களை விற்பனை செய்து முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப செலுத்துவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
