திமுக அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற நடிகர் விஜய்யின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: “திமுக அரசு தனது வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. எங்களால் அதை நிறைவேற்ற இயலவில்லையென்றால், மக்களை நேரில் சந்திக்க முடியாது.
எங்களுக்கு பாஜக கூட்டணி தேவையில்லை. பாஜக, மக்களுக்கு எந்த அளவுக்கு தொந்தரவு ஏற்படுத்த முடிகிறதோ, அந்த எல்லையிலும் செயற்படுகிறார்கள். கூட்டங்களை கலைக்க ஆம்புலன்ஸை பயன்படுத்த வேண்டும் எனும் நிலை திமுக அரசுக்கு வந்ததில்லை. மக்கள் ஆதரவு எங்களுக்கு இருப்பதால், அதனைச் செயற்பாடுகளில் காணலாம்,” என்றார்.
மேலும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் திருச்சி மற்றும் அரியலூரில் நடந்த பிரச்சார கூட்டங்களின் போது திமுக அரசு மீது பல்வேறு குற்றசாட்டுகளை சுமத்திய நிலையில் கல்வி கடன் ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், பெண்களுக்கு அரசு வேலையில் 40 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை எனவும் 505 வாக்குறுதிகள் கொடுத்தீர்களே என்ன ஆனது என்று கேட்க மட்டும்தான் முடியும் பதில் எதுவும் வராது என்று விமர்சித்திருந்தார். அதே நேரத்தில் விஜய் பேசும்போது திருச்சியில் பிரச்சார கூட்டத்தில் ஆம்புலன்ஸ் நுழைந்த நிலையில் இது திமுகவின் அரசியலாக இருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் அதற்கும் அமைச்சர் ரகுபதி விளக்கம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்
