சென்னை: தமிழக அரசின் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை எதிர்த்து வழக்கறிஞர் எம்.சத்தியகுமார் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரித்தது. தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இந்த மனுவை விசாரித்து, மனுவை வாபஸ் பெற அனுமதி மறுத்து, ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக அரசு தரப்பில் வாதித்த திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன், “இதே போன்ற வழக்கை உச்சநீதிமன்றமே ஏற்கனவே விசாரித்து, ரூ.10 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்துள்ளது. எனவே மீண்டும் இதே வழக்கை கொண்டு வர முடியாது” என்று வாதிட்டார். அதை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், அரசின் திட்டத்துக்கு எதிரான மனுவை தேவையற்றது எனக் குறிப்பிட்டு, அபராதம் விதித்து தள்ளுபடி செய்தது.
தமிழக அரசு மக்களின் நலனுக்காக செயல்படுத்தி வரும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு எதிரான வழக்கு இவ்வாறு முடிவுக்கு வந்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம், திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என சட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
