புது டெல்லி: ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க உத்தரவிட கோரிய மனுவில், ஒன்றிய அரசு தரப்புக்கு 8 வாரங்களில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில், உரிய அறிவுறுத்தல்களைப் பெறுவதற்காக 8 வாரங்கள் அவகாசம் வேண்டும் என்ற ஒன்றிய அரசு தரப்பு கோரிக்கையை, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஏற்றுக் கொண்டு வழக்கை ஒத்திவைத்தது.

மேலும், சமீபத்திய பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை சுட்டிக்காட்டி, “ஜம்மு & காஷ்மீரின் நிலைமையை கவனிக்காமல் விட முடியாது” என தலைமை நீதிபதி வலியுறுத்தியுள்ளார்.