தமிழ்நாடு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. குறிப்பாக, இரண்டாம் கட்டமாக இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள பெண்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா, அல்லது எந்த நிலையில் உள்ளது என்பது எந்த தேதியில் இருந்து தெரிந்து கொள்ளலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

முதல் கட்டத்தில் 1.15 கோடி தகுதியான பெண்கள் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். தற்போது, ஜூலை 15 முதல் தொடங்கிய “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக புதிதாக திருமணமானவர்கள், புதிய ரேஷன் கார்டு கேட்டவர்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் மனுக்கள் சமர்ப்பித்துள்ளனர்.

அரசு தரப்பில், இம்மனுக்கள் மீது அதிகபட்சம் 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 15 அன்று மனு கொடுத்தவர்களுக்கு ஆகஸ்ட் 28-ஆம் தேதி 45வது நாள் ஆகிறது. எனவே, அத்தேதி முதல் அடுத்தடுத்த நாட்களில் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா அல்லது பரிசீலனையில் உள்ளதா என்ற அப்டேட் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

இதோடு, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் மற்றும் மேலும் 46 வகையான சேவைகள் குறித்த தகவல்களும் அந்நாளிலிருந்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.