தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் கிட்டத்தட்ட பெண்கள் குழந்தைகள் என 39 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நிலையில் பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜயின் வீட்டிற்கு ஏற்கனவே துணை கமிஷனர் தலைமையில் 15 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது கூடுதலாக துணை ராணுவமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
நடிகர் விஜயின் வீட்டிற்குள் செல்ல தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் உட்பட யாருக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை எனவும் தீவிர சோதனைக்கு பிறகு முக்கிய நபர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் நடிகர் விஜயின் அடுத்த கட்ட சனிக்கிழமை பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாகவும் இனி பிரச்சாரக் கூட்டத்தை சிறிது நாட்கள் ஒத்திவைக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் இது தொடர்பாக அவரது வீட்டில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறுவதாகவும் செய்தி வெளிவந்துள்ளது.
