தெலுங்கு சினிமாவின் புகழ்பெற்ற நடிகரான கோட்டா ஸ்ரீனிவாச ராவ் (வயது 83) உடல்நலக்குறைவால்  காலமானார். கடந்த சில வருடங்களாகவே அவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், 2023ஆம் ஆண்டோடு தனது நடிப்பை நிறுத்தினார். தெலுங்கு சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் தனித்துவமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர்.

தமிழில், 2003ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிகொண்ட ‘சாமி’ திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையிலும் அறிமுகமானார். இவர் தனது நடிப்புக் பயணத்தில் 750-க்கும் மேற்பட்ட தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். . அவரது மறைவு திரைத்துறையில் பெரும் இழப்பாகும் நிலையில், திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.