தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது.
இந்த பள்ளியில் தங்கவேல் என்ற 43 வயது நபர் ஆசிரியராக பணிபுரிந்து வரும் நிலையில் இவர் 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக புகார் வந்தது. இது பற்றி தலைமை ஆசிரியரின் கவனத்திற்கு சென்ற நிலையில் உடனடியாக அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
ஆசிரியரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அரசு பள்ளியில் வைத்து 5 மாணவிகளிடம் ஆசிரியர் ஏற்ப பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தகவல் பெற்றோர் மத்தியிலும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
