தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திரையுலகிலும், பொது வாழ்விலும் தமது கடும் உழைப்பால் தனக்கென தனி முத்திரை பதித்தவர் விஜயகாந்த். கேப்டன் என தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் மறைவு பேரிழப்பாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனிடையே சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.