தமிழ் சினிமாவில் திரைக்கதை மன்னன் என போற்றப்படும் இயக்குனர் கே பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பின் காரணமாக தன்னுடைய 73 வயதில் மரணம் அடைந்தார். இவரது மரணம் ஒட்டுமொத்தத்திரை உலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 23 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள அவர் 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் மற்றும் பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கொண்ட பாக்கியராஜ் மறைவு ஒட்டுமொத்த திரையுலகுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

16 வயதினிலே திரைப்படத்தில் பாரதிராஜாவிடம் உதவியக்குனராக பணிபுரிந்த பாக்யராஜ் பின்னர் இயக்குனராக அறிமுகமானார். சமீபத்தில் பாரதிராஜா மரணமடைந்த நிலையில் தற்போது பாக்யராஜின் மரணமும் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது பாக்யராஜின் கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் பன்முக கலைஞனின் கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.