நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் இணையும் பட்சத்தில் கோவை மற்றும் தென் சென்னை தொகுதிகளை அக்கட்சி கேட்க முடிவு செய்துள்ளது. இதில் ஒரு தொகுதியில் கமல் போட்டியிடுவார் என தெரிகிறது.