ஒரு கிலோ பூண்டு விலை ₹500க்கு விற்பனை செய்யப்படுவதால் குடும்ப தலைவிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வரத்து குறைவால் கடந்த சில நாட்களாக ₹400 முதல் ₹450க்கு விற்பனையான பூண்டு விலை இன்று ₹500ஐ எட்டியது. மேலும், இஞ்சி ₹105, ஊட்டி கேரட் ₹80, அவரை ₹30, பச்சை மிளகாய் ₹30, தக்காளி ₹30, ஊட்டி பீட்ரூட் ₹50, வெங்காயம் கிலோ ₹20, முள்ளங்கி ₹20, வெண்டைக்காய் ₹35க்கும் விற்பனையாகிறது.