திமுக கூட்டணியில் ஐ.யூ.எம்.எல் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் மக்களவைத் தொகுதியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுக – ஐ.யூ.எம்.எல் இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. திமுக கூட்டணியில் ஐ.யூ.எம் எல் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நவாஸ் கனி மீண்டும் போட்டியிடுவார் என காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அகில இந்திய கட்சி என்பதால் ஏணி சின்னத்திலேயே போட்டியிடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்