அதிமுகவை விமர்சித்து திமுகவுக்கு ஆதரவாக அண்ணாமலை செயல்படுவதாக டெல்லியில் அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர். டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்த அதிமுக மூத்த தலைவர்கள், அண்ணாமலையை கட்டுப்படுத்தாவிடில் தேர்தல் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்றும் அண்ணாமலை தலைவர்களை விமர்சிப்பதால் கூட்டணி மீது தொண்டர்கள் விருப்பமின்றி இருப்பது பற்றியும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன