தொழில்முனைவோரின் நலனை கருத்தில் கொண்டு, தொழிற்சாலைகளுக்கு 50 கிலோவாட் வரை உத்தேசித்திருந்த நிலையான கட்டணத்தை மாதம் ஒன்றுக்கு ரூ.100லிருந்து ரூ.75ஆகவும், 50 – 100 கிலோவாட் வரை ரூ.325 லிருந்து ரூ.150ஆகவும், 100 – 112 கிலோவாட் வரை ரூ.500லிருந்து ரூ. 150ஆகவும், 112 கிலோவாட்டுக்கு மேல் ரூ. 600லிருந்து ரூ.550ஆகவும் கட்டணம் மாற்றி அமைக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.