மதுரை அருகே பாரப்பத்தி கிராமத்தில் இன்று மாலை நடைபெறும் தமிழகம் வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டுக்கு, வழக்கத்தைக் கடந்த அளவில் தொண்டர்கள் குவிந்துள்ள நிலையில், கடும் வெயிலில் அவர்கள் அவதிக்குள்ளாகியிருப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது. காலை முதலே பல்லாயிரக்கணக்கில் மக்கள் வந்ததால் மாநாட்டு திடலில் கடும் நெரிசலும் ஏற்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாக, சிலர் மயக்கம் அடைந்ததும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், பொதுமக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் திணற வேண்டாம் என்பதற்காக, முதல் முறையாக ட்ரோன் தொழில்நுட்பத்தின் மூலம் குடிநீர் பாட்டில்கள் தொண்டர்களிடம் விநியோகிக்கப்படுகின்றன. மேலும் மயக்கம் அடைந்த 224 பேருக்கு அவசர மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 17 பேர் சற்று கடுமையான நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து விழா தளத்தில் மருத்துவக் குழுவும் அவசர உதவிக்காக தயாராக இருக்கிறது.
