தமிழக வெற்றி கழகம் மீது இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ், சிபிஐ, விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் இதுவரை ஆதரவு கொடுத்துள்ள நிலையில் தற்போது மன்னார்குடி எம்எல்ஏ காமராஜூம் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் அனைவருமே ஆளுநர் ஆட்சி அமைந்து விடக்கூடாது என்ற காரணத்திற்காகவும் பாஜக தமிழ்நாட்டில் புகுந்து விடக்கூடாது என்ற காரணத்திற்காகவும் ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தேசிய பிரேமலதா விஜயகாந்த் பர்சனல் ஜோசியருக்கு எதற்காக அரசு பதவி கொடுத்தீர்கள் என்று முதல்வர் விஜயிடம் நேரடியாக கேள்வி கேட்ட நிலையில் பட்டினம்பாக்கம் வீட்டிற்குள் முகத்தை மூடிக்கொண்டு சென்றது யார் என்றும் அதிரடியான ஒரு கேள்வியை முன் வைத்துள்ளார். இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில் பாஜகவின் ஒரே ஒரு எம்எல்ஏவான போஜராஜன் யாருக்கும் ஆதரவு கொடுக்காமல் நடுநிலை வகிப்பதாக தெரிவித்தார்.
மேலும் இதனை தொடர்ந்து பேசிய பாமக கட்சியின் எம்எல்ஏ சௌமியா அன்புமணி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் பாமக விலகி இருக்கும் என்றார். அதோடு அவர் சில கோரிக்கைகளையும் முன் வைத்தார் அதன் படி, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் விகிதாச்சார அடிப்படையில் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் விவசாயத்திற்கு முக்கியத்துவம் தந்து, இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் மருத்துவம் இலவசமாக வழங்க வேண்டும் கனிமவளங்கள் கொள்ளைகளை தடுக்க வேண்டும் என்றார்.
