தமிழகச் சட்டமன்றத்தில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது பேசிய விசிக உறுப்பினர் வன்னி அரசு, அரசுக்குத் தனது ஆதரவைத் தெரிவிப்பதோடு சில அதிரடி கோரிக்கைகளையும் முன்வைத்தார்.
“ஜோதிடம் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு முன்னுரிமை தராமல், அறிவியலை வளர்ப்பதற்கே இந்த அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்திய அவர், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான வலுவான சட்டத்தைத் தமிழகச் சட்டமன்றத்தில் உடனே நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். குறிப்பாக, பகுத்தறிவுப் பாதையில் மாநில உரிமைகளைப் பாதுகாத்து இந்த அரசு பயணிக்க வேண்டும் என்பதே விசிக-வின் நிலைப்பாடு என்பதை வன்னி அரசு தனது உரையில் ஆணித்தரமாகப் பதிவு செய்தார்.
