பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருகிறார். மாலத்தீவில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்து அங்கு விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். அன்று இரவு திருச்சி செல்கிறார்.
பின்னர் 27ஆம் தேதி கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் நடக்கும் ஆடி திருவாதிரை விழாவில் கலந்துகொண்டு பகல் 2.25 மணிக்கு திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார். இந்த நிலையில் முதலமைச்சரின் மு க ஸ்டாலின் மருத்துவமனையில் இருப்பதால் தமிழ்நாட்டிற்கு வரவுள்ள பிரதமர் மோடியிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கியமானவை தலைமைச் செயலாளர் மூலமாக கொடுத்து அனுப்பியுள்ளார். கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமரிடம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
