கர்நாடக மாநிலம் தாவணகெரே பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்குத் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், இரண்டு குழந்தைகளுடன் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், மனைவியின் வாழ்க்கையில் நுழைந்த அவரது பழைய ஆண் நண்பர் ஒருவரால், குடும்பத்திற்குள் கடுமையான கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் வெடித்தன. மனைவியின் இந்தத் தவறான உறவைக் கண்டித்து குடும்பத்தைக் காப்பாற்ற கணவர் பலமுறை எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால், இருவரும் முறைப்படி பிரிந்து வாழத் தொடங்கினர்.அதன்படி, மூத்த மகள் தந்தையுடனும், இளைய மகள் தாயுடனும் வாழத் தொடங்கினர்.

கணவரைப் பிரிந்த அந்தப் பெண், தனது கள்ளக்காதலனுடன் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த நிலையில், அங்கு அடிக்கடி வந்து சென்ற கள்ளக்காதலனின் முன்னிலையில், சில நாட்களுக்கு முன்பு அந்தச் சிறுமி திடீரென உயிரிழந்தாள். உடல்நலக்குறைவால் தான் சிறுமி இறந்ததாகக் கூறி அவசரம்அவசரமாகஇறுதிச்சடங்குகளும்செய்துமுடிக்கப்பட்டன. இருப்பினும், தனது மகளின் திடீர் மரணத்தில் சந்தேகமடைந்த தந்தை, பிரேதப் பரிசோதனை அறிக்கையைத் தீர்க்கமாக ஆய்வு செய்து மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றார்.அதில் சிறுமியின் மரணம் இயற்கையானது அல்ல, அதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்பதற்கான அதிர்ச்சிகரமான ஆதாரங்கள் வெளிவந்தன.

இதையடுத்து, அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை நடத்திய அதிரடி விசாரணையில், அந்த சிறுமி திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இந்த கொடூரக் கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும் தாயையும் அவரது கள்ளக்காதலனையும் போலீஸார் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 15 ஆண்டு காலப் பாசப் பிணைப்பை மறந்து, கள்ளக்காதலுக்காகத் பெற்ற மகளையே பலிகொடுத்த இந்த நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளதுடன், நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.