தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வே பகுதி நேற்று உருவான நிலையில் அது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் நாளை முதல் 4 தினங்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நவம்பர் 25 முதல் 28ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதன் காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் 12 முதல் 20 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நவம்பர் 26 ஆம் தேதி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதன் காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று நவம்பர் 27 ஆம் தேதி திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் அதி கன மழைக்கு வாய்ப்புள்ளது.