தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம்  சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8:00 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 23ஆம்தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதேபோன்று அசாம், மேற்குவங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று மொத்தமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் பல தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.

தமிழக அரசியல் வரலாற்றில் எம்ஜிஆர்க்கு அடுத்தபடியாக நடிகர் விஜய் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அந்த வகையில் தமிழக வெற்றிக்கழகத்தின் வேட்பாளர்கள் பல இடங்களில் தற்போது வெற்றி வாகை சூடி வருகிறார்கள். தூத்துக்குடியில் ஸ்ரீநாத் வெற்றி பெற்ற நிலையில், மயிலாப்பூர், கோபிசெட்டிபாளையம், நாங்குநேரி, தஞ்சாவூர் என பல தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் வாகை சூடி உள்ளார்கள். இந்த வகையில் தற்போது சென்னை திருவிக  நகர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் பல்லவி வெற்றி வாகை சூடியுள்ளார்.