தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிவடைந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் தற்போது பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது தற்போது மழை பெய்ய தொடங்கி விட்டதால் அதனை முன்னிட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி மாணவர்கள் பள்ளிக்கு மிதிவண்டியில் வரும்போது சகதியில் வழுக்கி விழும் அபாயத்தை கூற வேண்டும். பள்ளியின் சுற்று சுவருக்கு 20 அடி தொலைவு வரை மாணவர்கள் செல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
விடுமுறை நாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிப்பதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். பள்ளிகளின் மேற்கூரைகள் உறுதியாக இருக்கிறதா என்பது குறித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
தொடர் மழை காரணமாக மின்கசிவு மற்றும் மின் கோளாறு இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மாணவர்கள் யாரும் மின்சாரத்தின் அருகில் செல்லக்கூடாது. பள்ளி வளாகத்தில் பழைய கட்டிடங்கள் மற்றும் புதிய கட்டிடப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு அருகே மாணவர்கள் செல்லக்கூடாது.
உபயோகமில்லாத மின் பொருட்கள் பள்ளி வளாகத்தின் அருகில் இருக்கக்கூடாது. மாணவர்களை கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணிகளை மேற்கொள்ளவும் பள்ளி திறக்கும் நாளில் காலாண்டு மதிப்பெண் தாள்களை கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
