சென்னையில் உள்ள கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த புற்றுநோய் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது வட மாநிலத்தைச் சேர்ந்த 25 வாலிபர் ஒருவர் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய நிலையில் அவர் சிகிச்சையில் இருக்கிறார். அந்த வாலிபர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு இந்திய மருத்துவர் சங்கத்தினர் கன்னடம் தெரிவித்துள்ளதோடு இன்று ஒரு நாள் முழுவதும் ஸ்ட்ரைக் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். அதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள 7900 மருத்துவமனைகள் மற்றும் 45 ஆயிரம் மருத்துவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். மேலும் இதன் காரணமாக புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவசரகால சிகிச்சை பிரிவு மட்டும் வழக்கம் போல் செயல்படுகிறது.
