தமிழ்நாடு மின்வாரியம் சார்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டண மாற்றம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. வீடுகள் மற்றும் விவசாயத்திற்கான மின்கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சார கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. வணிக பயன்பாட்டிற்கான மின்சார கட்டணம் 11 ரூபாயிலிருந்து 11.25 காசுகள் உயர்ந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தப் புது மின் கட்டண உயர்வு இன்று முதல் தமிழக முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.