நாடு முழுவதும் நாய்கடியால் மக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் என்பது அரங்கேறி வருகிறது. தெருவில் நடந்து செல்லும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை தெரு நாய்கள் துரத்தி கடிக்கும் வீடியோக்கள் கூட அவ்வப்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி நெஞ்சை பதற வைக்கிறது. குறிப்பாக குழந்தைகளை தெருநாய்கள் கடிக்கும் சம்பவங்கள் கூட அரங்கேறுகிறது. தெரு நாய் கடியால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்படையும் நிலையில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. சமீபத்தில் உச்ச நீதிமன்றம் டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் பிடித்து காப்பகத்தில் அடைக்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இருப்பினும் நாய்கள் அனைத்தையும் காப்பகத்தில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் தெரு நாய் கடியால் 3.60 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளதாக தற்போது பொது சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன் பிறகு நாய் கடித்ததால் ரேபிஸ் தொற்று பாதிப்பு 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நாய் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் பேபிஸ் உயிர் இழப்பை தடுக்கவும் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
