சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், மாநிலத் தலைமைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த விழாவைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் திரு. டி. ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசிய போது, “அ.தி.மு.க. மற்றும் அதிலிருந்து பிரிந்தவர்களுக்கிடையிலான ஒன்றிணைவு குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் தான் முடிவெடுப்பார்” என்றார்.
மேலும், நடிகர் விஜய்யின் அரசியல் ஆளுமையைப் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், “விஜய்க்கு மக்கள் வரவேற்பு இருப்பது உண்மைதான். ஆனால், அதனால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அண்ணா, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்களின் புகழ் மற்றும் பாரம்பரியமே எங்களுக்கான வாக்குகளை உறுதிப்படுத்துகிறது” என்றார்.
தொடர்ந்து, “நடிகர் விஜய், முதலில் ஸ்டாலினை ‘ஸ்டாலின் அங்கிள்’ என்று கூறினார். பின்னர், ‘ஸ்டாலின் சார்’ என்று திருத்தினார். அவர் என்னிடம் ஆலோசனை கேட்டிருந்தால்,சிஎம் சாத்தான் சார், அவரது மகன் துணை முதல்வர் உதயநிதியை மைடியர் குட்டிச்சாத்தான் சார் என்று நான் சொல்லிக் கொடுத்திருப்பேன் என்றார்.மேலும் அதிமுக ஓட்டுக்கள் விஜய்க்கு செல்லும் என்று அவர் நினைத்திருந்தால் அது தவறு என்றும் கண்டிப்பாக ஒருபோதும் அது நடக்காது என்றும் கூறினார்.
