தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அது தொடர்பான அரசாணை வெளிவந்துள்ளது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டு முதல் 11ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 2017-18 கல்வியாண்டிற்கு முன்னர் இருந்த நடைமுறையே பின்பற்றப்படும்.
இனி ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் அல்லாமல் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மட்டுமே மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பு கல்வி ஆண்டு முதல் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதோடு பன்னிரண்டாம் வகுப்புக்கு மட்டுமே மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
