தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சார்பாக சிபிஐ விசாரணை கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தாங்கள் அவ்வாறு மனுதாக்கல் செய்யவில்லை என உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்துள்ளனர்.

அதன்படி குடும்பத்தை பிரிந்து சென்ற தங்களுக்கு தொடர்பில்லாத பன்னீர்செல்வம் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளதாக கரூர் துயர சம்பவத்தில் உயர்ந்த குழந்தையின் தாயார் சர்மிளா என்பவர் கூறிய நிலையில் தன்னை ஏமாற்றி கையெழுத்து வாங்கி விட்டதாக செல்வராஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் முறியீடு செய்ததோடு இது தொடர்பாக அவர்கள் காணொளி வாயிலாக விளக்கம் கொடுத்தனர். சிபிஐ விசாரணை கோரிய மனு தாக்களில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக தமிழக அரசு கூறிய நிலையில் இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதனை கருத்தில் கொள்வோம் என உச்ச நீதிமன்றம் கூறியதோடு மனு தாக்கலில் மோசடி நடந்திருந்தால் அதையும் சிபிஐ விசாரணை மூலம் விசாரிக்க உத்தரவிடுவோம் என கூறியது.