சென்னையில் பிட்புல், ராட்வீலர் இன நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி வளர்ப்பவர்களுக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு உரிமம் பெற்ற இவ்வகை நாய்களை வீட்டிற்கு வெளியே அழைத்துச் செல்லும்போது கழுத்து பட்டை மற்றும் வாய் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.