தமிழகத்தில் டிட்வா புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. புதுச்சேரியிலும் மழை பெய்து வரும் நிலையில் பேரிடர் மீட்பு படைகள் தயார் நிலையில் இருக்கும் நிலையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருக்கிறது.

முதலமைச்சர் இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ள நிலையில் பொதுமக்களை பாதுகாப்பாக இருக்கும் படியும் எச்சரித்துள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கடற்கரை அருகே செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் தமிழகத்தில் புயல் காரணமாக இதுவரை மூன்று பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் 2393 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.