அதிமுக கட்சியில் எம்ஜிஆர் காலத்தில் தன்னுடைய 20 வயதில் கட்சியில் சேர்ந்தவர் செங்கோட்டையன். அப்போதே கோபிசெட்டிபாளையத்தில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர். அதிக முறை எம்எல்ஏவாக இருந்தவர். 50 வருட அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதலமைச்சர் என்று கூறப்பட்ட நிலையில் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனார்.
அதிமுக கட்சியில் ஏற்பட்ட பிரிவு காரணமாக பலர் பிரிந்து சென்றனர். இவ்வாறு பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்று சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன் கூறிய நிலையில் அவரை அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார். இதனைத் தொடர்ந்து தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகத்தில் விஜய் முன்னிலையில் இணைந்தார். அவர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் புகைப்படங்களுடன் விஜய் இருக்கும் போட்டோவை தன்னுடைய கட்சி அலுவலகத்தில் வைத்துள்ளார்.
இந்த நிலையில் செங்கோட்டையனை கண்டித்து அதிமுக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில் செங்கோட்டையனே அடையாளம் தந்த அதிமுக வேண்டாம் என்று போன பிறகு எம்ஜிஆர் அம்மா படம் மட்டும் எதற்கு. சூடு சொரணை இருந்தால் எம்ஜிஆர் அம்மா படத்தை பயன்படுத்தாதே என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டர் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
