கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் டிச. 15ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. டிச.16, 17 ஆகிய தேதிகளில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.