அரசு அலுவலகங்களில் தினமும் ஒரு திருக்குறள், தமிழ் கலைச் சொற்களை காட்சிப்படுத்த வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலக துறைகள், தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதனை பின்பற்ற வேண்டும் என்று அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துறைத் தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.