கழக துணை பொதுச் செயலாளர் கே.பி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தபோது “அதிமுக வரலாற்றில் முத்திரை பதிக்கும் விதமாக புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா போன்றோரின் வழியில் 3-ம் தலைமுறையாக ஒன்றரை கோடி தொண்டர்களால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின்  ஆணைக்கிணங்க வருகிற ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் நடைபெறும் மாநாட்டிற்காக 3 இடங்களை பார்த்துள்ளோம்.

இதனிடையே பன்னீர்செல்வம் மற்றும் உதயநிதி சந்தித்து பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, வெக்கங்கெட்டவர்களை பற்றி பேச எனக்கு வெட்கமாக இருக்கிறது என கே.பி முனுசாமி கூறினார். தி.மு.க ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு ரவுடிகள் அதிகரித்துள்ளனர். மணல் கொள்ளையில் தி.மு.க நிர்வாகிகள் இருக்கின்றனர். கண்டிப்பான முறையில் செயல்பட்ட கிராம நிர்வாக அதிகாரியை கொலை செய்து உள்ளனர். சட்டத்தை திமுகவினர் கையில் எடுத்திருப்பதால் கொலை செய்தவர் யார் என இதுவரை கொண்டுவரப்படவில்லை என அவர் கூறினார்.