சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் பல வினோதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஓடும் ரயில் ஒன்றில் உணவுப் பண்டங்களை விற்கும் வியாபாரி ஒருவரின் வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு சுடச்சுட உருளைக்கிழங்கு வடை விற்கும் அந்த வியாபாரி, ஒரு கையில் வடைகளையும், மற்றொரு கையில் கட்டுக்கட்டாகப் பணத்தையும் வைத்துக் கொண்டு வியாபாரம் செய்கிறார். வடைகளை வாங்குவதற்காக அவரை நெருங்கிய பயணிகள், அவரது கையில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் பண மூட்டையைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

“>

இதனால் ரயில்வே துறையின் விதிகளின்படி, ரயில்களில் அங்கீகரிக்கப்படாத வியாபாரிகள் வியாபாரம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்த வியாபாரி இவ்வளவு பெரிய தொகையை கையில் வைத்துக் கொண்டு ரயிலில் வலம் வருவது பயணிகளிடையே வியப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், ரயில்வே நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.