கடந்த திமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் கடுமையாக எதிர்க்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மத்திய அரசின் புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டமான ‘VB-G RAM G’ திட்டத்தை, தற்போது தமிழகத்தில் செயல்படுத்த தமிழக அரசு அதிரடி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த இருபது ஆண்டுகாலமாக நடைமுறையில் இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு (100 நாள் வேலைத் திட்டம்) மாற்றாக இந்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் மூலம் கிராமப்புற தொழிலாளர்களின் வேலை நாட்கள் 100-ல் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்படவுள்ளது ஏழை எளிய மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், இந்த திட்டத்தின் பின்னணியில் மாநில அரசுக்கு மிகப்பெரிய நிதி நெருக்கடியும் காத்திருக்கிறது. பழைய திட்டத்தில் தொழிலாளர்களின் ஊதியத்திற்கான முழு செலவையும் மத்திய அரசே ஏற்றுக் கொண்ட நிலையில், இந்த புதிய ‘VB-G RAM G’ திட்டத்தில் 60:40 என்ற விகிதத்தில் மத்திய-மாநில அரசுகள் நிதியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என புதிய நிபந்தனை மாற்றப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழக அரசு தன் பங்கிற்கு கூடுதலாக ₹5,000 கோடி வரை ஒதுக்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது. முந்தைய அரசு சட்டமன்றத்தில் எதிர்த்த ஒரு திட்டத்தை, மக்களின் நலன் கருதி இவ்வளவு பெரிய நிதிச் சுமையையும் பொருட்படுத்தாமல் முதல்வர் விஜய் அரசு செயல்படுத்த முன்வந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாபிக்
