தமிழக முதல்வர் விஜய் அரசுமுறை பயணமாக டெல்லி செல்லவிருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் அவர் தனி விமானத்தில் சொகுசு பயணம் மேற்கொள்வதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. தனி விமானத்தில் டெல்லி சென்று வர கிட்டத்தட்ட ₹50 லட்சம் வரை செலவாகும் என்பதால், மக்கள் பணத்திலா இந்த சொகுசு பயணம் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
​அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு.

​இந்த விமர்சனங்களுக்கு சற்றும் தாமதிக்காமல், அதிரடியான ஒரு முடிவை எடுத்துள்ளார் முதல்வர் விஜய். அரசுமுறை பயணமாகவே இருந்தாலும், இந்த தனி விமான பயணத்திற்கான முழு செலவையும் தனது சொந்த பணத்தில் (Personal Funds) இருந்தே செலுத்த அவர் முடிவு செய்துள்ளார்.

​இது தொடர்பாக, டெல்லி பயணத்திற்கான செலவுத் தொகையை தனது சொந்த கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் அதிரடி அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விமர்சகர்களின் வாயை அடைக்கும் விதமாக முதல்வர் விஜய் எடுத்துள்ள இந்த நேர்மையான முடிவு, தற்போது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!