திருச்சி மற்றும் திருவாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நடந்த கோர விபத்தில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விறகு ஏற்றி வந்த லாரி மீது ஆம்னி கார் ஒன்று பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் உள்ளே இருந்த ஒன்பது பேரில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மூன்று பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.