சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் வரையில் குறைந்த நிலையில் இன்றும் விலை குறைந்துள்ளது. அதன்படி இன்றும் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,14,560 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 15621 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,24,968 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 265 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,65,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.