சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை அடைந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 77640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதன் பிறகு ஒரு கிராம் 9705 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலை உயர்ந்து ஒரு கிராம் 10587 ரூபாய்க்கும், ஒரு சவரன் 84696 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு இரண்டு ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 136 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 136000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
